Monday, October 25, 2021

12 - வது மலேசியா திட்டம் - மலேசிய சோசலிசக் கட்சியின் கருத்து மற்றும் எதிர்வினை

 

12 - வது மலேசியா திட்டம் பற்றிய

மலேசிய சோசலிசக் கட்சியின் கருத்து மற்றும் எதிர்வினை

அக்டோபர்- 25

அண்மையில் 12-வது மலேசிய திட்டத்தை பிரதமர் தாக்கல் செய்திருந்தார். 2025-ஆம் ஆண்டு வரை நடப்பில் இருக்கும் சில திட்டங்களும்,  புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் புதிய மேம்பாட்டுத் திட்டங்களும் செயற்படும். இந்நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ சப்ரி யாக்கோப் வெளியிட்ட 12வது மலேசியத் திட்டத்தில் மலேசிய சோசலிசக் கட்சி சில கருத்துகளையும் முரண்பாடுகளையும் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.


அது தொடர்பான மகஜர் ஒன்றையும் இன்று பிரதமர் துறை அலுவலகத்தில் அக்கட்சி சமர்பித்தது.

இது தொடர்பாக பேசிய மலேசிய கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் ஜெயகுமார், மலேசிய திட்டம் என்பது நாட்டுக்கும் நாட்டு மக்கள் தொடர்பாகவும் நடப்பில் இருக்கிற  முக்கியமான  பிரச்சினைகளை அரசாங்கத்தின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை  கோடிட்டுக் காட்டும் ஒரு திட்டமாகும். இந்நிலையில் தற்போது அமலுக்கு வந்திருக்கும் 12-வது மலேசிய திட்டத்தில், பிரதமர் துறையின் கீழ் இயங்கும் பொருளாதார திட்டமிடல் பிரிவின் கவனத்திற்கு ஆறு முக்கியமான சிக்கல்களை நாங்கள் குரிப்பிட விரும்புகிறோம். மலேசியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்கும் உத்திகள் மற்றும் பரிந்துரைகளை மேலும் வலுப்படுத்த இந்த கோரிக்கைகள்  உதவும் என்பது எங்களின்  நம்பிக்கை என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் பிரதமர்துறை அலுவலகத்தில் காலை 11 மணியளவில் மிக தெளிவாக எழுதப்பட்ட 9 பக்கம் கொண்ட மகஜரை, பிரதம துறை அதிகாரியான டத்தோ இர்வானிடம் கைகளிக்கப்பட்டது. குறிப்பிட்ட மகஜரில் முன்வைக்கப்பட்ட 6 கோரிகைகள் பின்வருமாறு…

1.   1. தொழிலாளர்களின் இழப்பீட்டுப் பங்கு  அதிகரிக்க வேண்டும்.

2.   2. B40-மக்கள் பிரிவு  மத்தியில் தொழிலாளர் இழப்பீடு பிரிவை (BPP) அதிகரிப்பதற்கான முயற்சிகளை 12-வது மலேசியத் திட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டது.

3.   3. "மலிவு வீடு" என்ற சொல் பற்றிய குழப்பம்.

4.  4.  மலிவு விலை வீடுகள் தொடர்பான இலக்குகளை அடைவதில் அரசாங்கம் தீவிர அக்கறை காட்டவில்லை.

5.   5. மருத்துவச் சேவைகளின் விலை அரசுக்கு நிதிச்சுமை என்ற அணுகுமுறை குறைக்கப்பட வேண்டும்.

6.   6. 12-வது மலேசியத் திட்டத்தில் "கிரீன்வாஷிங்" கூறுகள்

மேற்குறிப்பிட்டிருக்கும் 6 விஷயங்களில் 12-வது மலேசியத் திட்டத்தில் திருத்திகரமான திட்டம் இல்லாததால் இந்தக் கோரிகைகளை பி.எஸ்.எம் முன்வைத்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

 

 

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...