Tuesday, November 23, 2021

விவசாய மக்களிடம் ஞாயமாக நடந்துகொள்ளுங்கள்...

சுமார் 70- ஆண்டுகளாக தஞ்சோங் பாசீர் மக்கள் அங்கு குடியிருக்கின்றனர்.  தொடக்க காலத்தில் அவர்கள் அங்கு குடியேறிய போது  அங்கிருந்த நிலத்தை விவசாய நிலமாக மாற்றி செம்பனையை பயிர்செய்து பொருளாதாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக அது விவசாய நிலமாகவே இருந்து வருவது குறிப்பிடதக்கது. 

தற்போது அந்த நிலத்தை மாநில அரசாங்கம் தனியார் நிறுவனத்திற்கு அந்நிலத்தை மேம்பாட்டுக்காக  விற்றுவிட்ட நிலையில், குடியிருப்பாளர்கள் பயிர்செய்து அறுவடை செய்துக்கொண்டிருந்த செம்பனை மரங்களை அழிக்க மேம்பாட்டு நிறுவனம் முடிவெடுத்து அதற்கான வேலையையும் தொடங்கியிருக்கிறது. 

இதை அங்கிருக்கும் விவசாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஞாயம் கோரி வருகின்றனர். பல ஆண்டுகளாக பயிர்செய்து விவசாயம் செய்துவரும் நிலத்தை எங்களிடம் ஒருவார்த்தைக் கூட கூறாமல், இதற்கு ஒரு மாற்றுவழியைத் தேடாமல், நிலத்தை விற்பதும், மரங்களை இப்படி  அழிப்பதும் எப்படி நியாயம் ஆகும்? அரசாங்கம் ஏன் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை? ஏன் விவசாய மக்களுக்கும், விவசாய நிலத்திற்கும் இந்த நாட்டில் முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது?  நிலத்திற்கு பட்டா மற்றும் உரிமை எங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்,  தனியார் நிறுவனத்திற்கு அந்த நிலத்தை விற்க முடிவெடுத்த அரசாங்கம், ஏன் விவசாயிகளுக்கு அந்த வாய்ப்பினை கொடுக்க மறுக்கிறது?   என கேள்வி எழுப்புகின்றனர்.  


விவசாய மக்களின் இந்தப் பிரச்னை தொடர்பாக பி.எஸ்.எம் துணைத்தலைவர் அருட்செல்வன் இன்று அம்மக்களிடம் கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக நாளை மாநில அரசுடன் ஒரு பேச்சுவார்த்தையும் நடக்கவிருக்கிறது. அந்தச் சந்திப்பில் மேம்பாட்டு நிறுவனத்தையும், விவசாய மக்களையும் மாநில அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. 

மக்கள் சார்பில் சிலக் கோரிக்கைகள் நாளை வைக்கப்படவுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளது. குறிப்பாக முன் அறிவிப்பு மற்றும் அனுமதி ஏதுமின்றி மேம்பாட்டு நிறுவனம் செம்பனை தோட்டத்தில் நுழைந்து மரங்களை அழிக்கிறது. இதுவரை 24 மரங்கள் இப்படி அழிக்கப்பட்டுவிட்டன. இதுமுறையில்லை. ஒவ்வொருமுறையும் எங்களால் இந்த அழிவை தடுத்துநிறுத்த முடியாது. இது தொடர்பான பேச்சுவார்த்தை முடியும்வரை மரங்களை அழிக்ககூடாது என மாநில அரசிடம் மக்கள் கோரிக்கை வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

(இந்நிலையில் மாநில அரசிடம் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக அன்றைய நாள் தெரிவித்த வேளையில் நடக்கவிருந்த சந்திப்பினை மாநில அரசாங்கம் ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது)

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...