Tuesday, October 19, 2021

பூர்வக்குடி மக்களின் நில ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது

 

சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பில், இணையம் வழியாக நடத்தப்பட்ட ‘பாமர மக்களுக்கான ’ தொடர் கருத்தரங்கில், நான்காம் நாள் சந்திப்பில் (அக்டோபர் 15, 2021) COVID-19- இன் போது பூர்வக்குடி மக்களின் நில ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது என்ற தலைப்பில் உரையாடப்பட்டது.

கருத்தரங்கில் பேச்சாளர்களாக வாதிட்ட கிட்டத்தட்ட அனைவருமே,  பழங்குடியினர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலன்கள் கூட்டாட்சி அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன என்பதை ஒப்புக்கொண்டாலும் உண்மையில் பூர்வக்குடிகளின் நில அபகரிப்பு மீதான அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட விவகாரங்கள்  அதிகரித்து வருகிறது என்பதை பதிவு செய்தனர். நிலப் பிரச்சினைகள் மற்றும் நிலச் சட்டங்கள் தொடர்பாகவும் இந்தக் கருத்தரங்கில் பேசப்பட்டது.

Centre for Orang Asli Concerns (COAC) எனும் பழங்குடியினர் மையத்தின் மூத்த செயற்பாட்டாளரான  கோலின் நிக்கோலஸ் பேசுகையில் நமது நாடு கோவிட் -19 நடமாட்டக் கட்டுப்பாட்டு நிலையில் இருந்தபோதும், பூர்வக்குடிகளின் நில ஆக்கிரமிப்பு மற்றும் வனங்களில் மரம் வெட்டுதல் உள்ளிட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தெளிவான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கருத்தரங்கில் தீபகற்பத்தைச் சேர்ந்த பூர்வக்குடி போராட்டவாதிகளும், சபா சரவாக் மாநில பூர்வக்குடி போராட்டவாதிகளும் இவர்களோடு 80-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வளர்களும் கலந்துகொண்டனர். குறிப்பாக Jaringan Kampung Orang Asli Semenanjung Malaysia (JKOASM) அமைப்பின் தலைவர் திஜா யோக் சோபில், சபா மாநிலத்தின் Pacos Trust அமைப்பைச் சேர்ந்த காலூஸ் அஃதோய், Jaringan Orang Asal Se-Malaysia (JOAS) அமைப்பின் முன்னாள் தலைவர் யூஸ்ரி அச்சோன்,  சரவாக் மாநிலத்தின் Majlis Adat Istiadat Sarawak அமைப்பைச் சேர்ந்த முன்னாள் துணைத் தலைவர் நிக்கோலஸ் பாவின், Sahabat Alam Malaysia (SAM) அமைப்பைச் சேர்ந்த ஷாமிளா அரிஃபின் இவர்களோடு Centre for Orang Asli Concerns (COAC) அமைப்பைச் சேர்ந்த  கோலின் நிக்கோலஸ் மற்றும் மனித உரிமை வழக்கறிஞரான சித்தி காசிம் ஆகியோர் பிரதான பேச்சாளராக  இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். 

கோலின் மற்றும் காலஸ் ஆகிய இரண்டு ஆர்வலர்கள் பேசுகையில், வழக்கத்தைவிட 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் COIVD-19 தொற்றுநோய் 45 % கடுமையாக இருந்த நேரத்தில் பூர்வக்குடிகளின் நில ஆக்ரமிப்பு  தீவிரமாக நடந்ததை விவரித்தனர்.  கோவிஸ் -19 க்கு முன்னர் வழங்கப்பட்ட நில உரிமையை அடிப்படையாகக் கொண்ட ஆக்கிரமிப்பு பணிகள், கோவிட் தொற்றின்போதும் நடந்து கொண்டிருந்தன என்று காலஸ் தனது அவதானிப்புகளின்படி விளக்கினார். இதற்கிடையில், பல லாரிகள் மரம் வெட்டும் பகுதியில் இருந்து மரங்களை எடுக்க தயாராக இருப்பதைக் காட்டும் வீடியோவையும் அந்நிகழ்ச்சியில கோலின் பதிவுசெய்தார்.

நமது நாட்டில், அதாவது தீபகற்பம், சரவாக் மற்றும் சபா ஆகியவற்றில் மூன்று வெவ்வேறு வழக்கமான நில உடைமை சட்டங்கள் கொண்டிருப்பதை  மிக கவனமுடன் இந்தக் கருந்தரங்கில் பேசப்பட்டது.  அதேவேளையில் அனுபவமில்லாத தீபகற்ப நீதிபதிகளால் சரவாகில் நிலம் தொடர்பான வழக்குகளிலும் அளிக்கப்பட்டிருக்கும் அலட்சியமான தீர்ப்புகளை அவர் சுட்டிக்காட்டினார்.

திஜாவும் யூஸ்ரியும் பேசும்போது  நில ஆக்கிரமிப்பு தொடர்பாக போராடாத பூர்வக்குடிகளை  குற்றம் சாட்டவோ அல்லது கேள்வி கேட்கவோ முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர். வழக்கமான நில ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைக்கும் ஒரு பூர்வக்குடி கிராமத்தில் உள்ள ஓரிரு பழங்குடியினரை, பழங்குடி நில ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஒரு பெரிய பூர்வக்குடி குழுவுடன் சமப்படுத்த முடியாது. தங்கள் குடும்ப வருமானத்திற்காக நிலத்தின் ஆக்கிரமிப்பாளர்களின் கீழ்  சில பூர்வக்குடி மக்கள் வேலை செய்கின்றனர்.  தங்கள் வருமான ஆதாரத்தை இழந்த பழங்குடி மக்களும் உள்ளனர்.

டுரியான் தோட்டங்கள் பூர்வக்குடிகளுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கிறதா அல்லது அது ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறதா என்ற கேள்விக்கு, தீபகற்பத்தில் உள்ள பழங்குடி ஆர்வலர்கள் கூற்றுப்படி, வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், அங்கு மேலும் - மேலும் தீமைகள் ஏற்படுவதாகவும் அவர்களின் வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதிக சிக்கல்கள் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஷாமிலா பேசுகையில், பூர்வக்குடிகளின் “பூர்வீகம்” மற்றும்  "பூர்வீக நிலம்” என்ற வார்த்தையின் பொருள் மற்றும் அர்த்ததை விளக்கினார், ஏனெனில் பூர்வக்குடிகளின் சட்டத்தின் கீழ் பூர்வீக நிலம் அங்கீகரிக்கப்பட்டது. பூர்வக்குடிகளின் பூர்வீக நிலமானது, பெறுநிருவனங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் மரம் வெட்டுதலுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து தோட்டங்கள் மற்றும் சுரங்கங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. தமது பூர்வீக நிலங்களைப் பாதுகாத்த பழங்குடி மக்களின் பெரும் போராட்டத்தையும் அவர் விவரித்தார், அப்போராட்டத்தில் பலர் நீண்ட காலமாக சிறையில் இருந்தனர், ஆனால் அந்த விவகாரங்கள் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. “பெர்சே” போராட்டத்தில் அதன் ஆர்வலர்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே சிறையில் இருந்தபோதிலும் பெரும் விளம்பரத்தைப் பெற்றனர் என்று அவர் ஒரு ஒப்பீடு செய்தார்.

 

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...