Monday, November 29, 2021

கேட்கோ விவகாரம். குடியிருப்பாளர்கள் மாநில முதல்வரை சந்திக்க விடாமல் தடுப்பது ஏன்?

 

ஜெம்போல் நெகிரி செம்பிலான், கேட்கோ குடியேறிகளின் நிலப் பிரச்சினை அம்மாநில அரசாங்கத்தால் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது ஊடகங்கள் அறிந்ததே. தேர்தலுக்கு முன்பு கெட்கோவின் அசல் குடியேறிகளுக்கு 8 ஏக்கர்  நிலத்தையும், வாங்குபவர்களுக்கு 4 ஏக்கரையும் கொடுப்பதாக மாநில அரசு உறுதியளித்தனர். 100-க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் இன்னும் பக்காத்தான் ஹராப்பானின்  அம்முடிவுக்காக  காத்திருக்கின்றனர்.

நெகிரி செம்பிலான் அரசு  அதிகாரியான YBவீரப்பன் மீது குடியேற்றவாசிகள் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில், கேட்கோ குடியேற்றவாசிகளின் அசல் உரிமைகளை மீட்டெடுக்க எந்த முயற்சியும் அவர் எடுக்காமல் , லோட்டஸ் நிறுவனம் மாநில அரசுக்கு வழங்கிய நிலத்தை ஏற்குமாறு குடியிருப்பாளர்களை அடிக்கடி மிரட்டிக்கொண்டிருக்கிறார்.


எனவே  இவ்விவகாரம் தொடர்பாக, ​​கேட்கோ  குடியிருப்பாளர்கள்  மாநில முதல்வரை சந்திக்க உள்ளனர். காரணம் அவர் முன்பு தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளார்.  அந்த நம்பிக்கையில் நவம்பர் 30-ஆம் தேதி காலை 11 மணியளவில் மாநில சட்டமன்றத்திற்குச் செல்லவிருப்பதை முதல் நாளே கேட்கோ குடியிருப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.

 

கேட்கோ குடியேற்றக்காரர்கள் சென்ற பேருந்து

காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

 

மாநில முதல்வரை சந்திக்க செல்வதற்கு, கேட்கோ குடியேறிகள் ஏறிய பேருந்தை பரோய் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இன்று, கேட்கோ குடியேற்றக்காரர்கள், மாநில அரசு கேட்கோ நிலப்பிரச்னையை கையாண்ட விதம் குறித்த அதிருப்தியையும், நிலம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தவும் நெகிரி செம்பிலான் எம்பியை சந்திக்க மாநில முதல்வர் அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் போலீஸ்காரர்கள் குடியிருப்பாளர்கள் சவாரி செய்த பேருந்தை நிறுத்தி, அவர்கள் வைத்திருந்த அனைத்து பதாதைகள் மற்றும் பேனர்களையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் அனைவரின் அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுனரிடம் விசாரனை மேற்கொள்ளப்பட்டது. தவிர, ஒரு போலீஸ் அதிகாரி பேருந்தை கண்காணிக்கும் நோக்கில், பேருந்தில் அமர்ந்துக்கொண்டு,  பேருந்தை மீண்டும் கேட்கோ-வை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் கேட்கோ குடியிருப்பாளர்களின் மற்றுமொரு குழு, நெகிரி செம்பிலான் மாநில அலுவலகம் நோக்கி முன்னேறியுள்ளது. அவர்கள்  பதாதைகள் ஏந்தி தங்களின் எதிர்ப்பையும் அதிருப்தியும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

சுமார் 11.30 மணியளவில் குடியிருப்பாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அடையாள அட்டைகள் அனைத்தும் திருப்பிகொடுக்கப்பட்டன. ஆனால், அவர்களை யாரையும் மாநில அலுவலகம் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.


நீண்டகாலமாகவே காட்கோ குடியேற்றவாசிகளுடன் அவர்களின் நில உரிமைக்கா உடன் இருந்து வரும், மலேசிய சோசியலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) தேசிய துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன், ஆர்.காந்தி மற்றும் எஸ்.தினகரன் போன்ற பிஎஸ்எம் சிரம்பான் தோழர்கள், இன்றும் கேட்கோ மக்களுடன் உடன் நின்றனர்.

கேட்கோ குடியேற்றவாசிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசு அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்துவது இது முதல் முறையல்ல. கேட்கோ குடியேற்றவாசிகள் 1983 முதல் தங்களுக்கு உறுதியளித்தபடி ஒரு குடும்பத்திற்கு 8 ஏக்கர் நிலம் கோரினர், மேலும் நெகிரி செம்பிலான் அரசாங்கத்தை இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

தற்போது, நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த, நெகிரி செம்பிலானின் மாநில முதல்வர் அமினுடின் ஹருன் டிசம்பர் 2021 இறுதியில் அல்லது ஜனவரி 2022 தொடக்கத்தில் கேட்கோ குடியேறிகளின் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...