Tuesday, November 30, 2021

பாடாங் மேஹா தோட்ட முன்னாள் ஊழியர்களுக்கு ஒரு மடல்...

 தோழர்களே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இந்தக் கடிதத்தில் சுருக்கமான விளக்கத்தைத் தருகிறோம். இந்தக் கடிதத்தைப் படித்துப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள்; இன்னும் இதுகுறித்து தெளிவாக தெரிந்துகொள்ள வரவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளவும்.

 பாடாங் மேஹா தோட்டத்தின் முன்னாள் பணியாளர்களை இரண்டு பெரிய குழுக்களாகப் பிரிக்கலாம். 131 முன்னாள் ஊழியர்களைக் கொண்ட முதல் குழு ஹக்கெம் அரபியின் சட்ட நிறுவனத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது, இரண்டாவது குழுவில் ஹக்கெம் அரபியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத 80 முன்னாள் ஊழியர்கள் இருக்கின்றனர்.

 ஹக்கெம் அரபி பிரதிநிதித்துவப்படுத்திய 131 முன்னாள் பணியாளர்கள் குறித்து:

Alamanda, 2  Liquidator  நிறுவனங்கள், MBF Holdings மற்றும் Vintage Development உள்ளிட்ட 6 தரப்பினரிடம் ஹக்கெம் அரபி இழப்பீடு கோரியுள்ளார்.

  Liquidator நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் (அலமண்டாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ) 1995-ஆம் ஆண்டு EAC  வழங்கிய அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணியாளரின் சேவை காலத்தைப் பொறுத்து  “ex-gratia” இழப்பீடு வழங்க 2. 10/4/2018 அன்று ஒப்புக்கொண்டனர்.  EAC பட்டியலில் உள்ள அனைத்து 211 முன்னாள் ஊழியர்களுக்கும் பகிர்ந்தளிக்க ஹகேம் அரபி நிறுவனத்திற்கு  2 Liquidator- களால் RM 1.034 மில்லியன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் வெளிப்படுத்தப்பட்ட ஆவணங்கள், முன்னாள் ஊழியர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்காக 1995-ஆம் ஆண்டு EAC, MBF ஹோல்டிங்ஸ்-இடம்  RM 3.36 மில்லியனை  செலுத்தியதை நிரூபித்துள்ளது. MBF ஹோல்டிங்ஸ் இந்த இழப்பீட்டுத் தொகையை செலுத்துவதைத் தவிர்த்திருப்பதோடு ‘’சட்ட வரம்பு’’ அடிப்படையில் இது 6 ஆண்டுகளுக்கும் மேலாக கோரப்படாத கடன் என்றும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அது சுயமாகவே காலாவதியாகிவிடும் என்றும் கூறியிருக்கிறது.

 வழக்கறிஞர் ஹகேம் அரபியின் வாதத்தின்போது,  MBF ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு EAC RM 3.36 மில்லியன் ரிங்கிட் செலுத்தியபோது ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டதாக கூறினார். சட்டப்படி, அறக்கட்டளைக்கு எந்தக் கால வரம்பும் இல்லை. 6 ஆண்டுகளுக்குப் பிறகுகூட  அதைக் கோரலாம். வழக்கறிஞர் ஹகேம் அரபியின் இந்த வாதம் உயர் நீதிமன்றத்தில் தோல்வியடைந்தது, ஆனால் புத்ராஜெயாவில் உள்ள  மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றம் 4/4/2019 அன்று  இவ்வாறு தீர்ப்பளித்தது :

 

- ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க MBF ஹோல்டிங்ஸ் ஹக்கெம் அரபிக்கு உடனடியாக RM 3.36 மில்லியனை வழங்கவேண்டும்.

 - முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் EAC பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

 - முன்னாள் ஊழியர்கள் இழப்பீட்டுத் தொகை பெற்று ஆறு மாதங்களுக்குள் நிலத்தை காலி செய்ய வேண்டும்

- அனைத்து ஊழியர்களுக்கும் பணம் செலுத்திய பிறகு அதிகப்படியான பணம் MBF ஹோல்டிங்ஸுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும்.

 MBF ஹோல்டிங்ஸ் இந்த முடிவில் திருப்தி அடையாததால் அது  பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பிப்ரவரி 2020 இல், நீதிபதி ஹக்கெம் அரபி  மற்றும் MBF ஹோல்டிங்ஸ் இடையே ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

-வழக்கறிஞர் ஹக்கெம் அராபி 131 முன்னாள் ஊழியர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதால், அவர்களுக்கு மட்டும் பணம் செலுத்த போதுமான தொகை, அதாவது RM 1.5 மில்லியன் மட்டுமே, MBF ஹோல்டிங்ஸிலிருந்து ஹக்கெம் அரபிக்கு மாற்றப்பட வேண்டும்.

-  இந்த இழப்பீட்டுத் தொகையானது ஒவ்வொரு முன்னாள் ஊழியருக்கும் அவர் தனது வீட்டைக் காலி செய்த பின்னரே வழங்க முடியும். முன்னாள் ஊழியர்களுக்கு வீட்டை காலி செய்ய ஆறு மாத கால அவகாசம் (ஆகஸ்ட் 2020 வரை)

- முன்னாள் ஊழியர்களுக்கு வழங்க முடியாத இழப்பீட்டுத் தொகை MBF எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கிய 21 நாட்களுக்குள் MBF ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குத் திரும்பப் பெற வேண்டும்.

- ஆறு மாதங்களுக்குள் தோட்டத்தைக் காலி செய்ய மறுக்கும் முன்னாள் ஊழியர்களை வெளியேற்ற நீதிமன்ற நடவடிக்கைகளைத் தாக்கல் செய்ய MBF ஹோல்டிங்ஸ் உரிமை கொண்டுள்ளது.

 வழக்கறிஞர் ஹக்கேம் அரபியிடமிருந்து எனக்கு (நவம்பர் 2021 தொடக்கத்தில்) அழைப்பு வந்தது, MBF ஹோல்டிங், முன்னாள் ஊழியர்களுக்கு வழங்கப்படாத இழப்பீட்டுத் தொகையைத் திரும்பக் கோருகிறது என்று. MBF-இன் கூற்றுப்படி, கோவிட் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடு நடவடிக்கையில் கருத்தில் கொண்டு அவர்கள் அதிக நேரம் கொடுத்துள்ளனர், ஆனால் ஃபெடரல் நீதிமன்றத்தில் பரஸ்பர ஒப்பந்தம் செய்து 20 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது.

 

7.       2003 - 2011 –ஆம் ஆண்டுகளில் CAP-யிலிருந்து இந்த வழக்குக்கு உதவிய வழக்கறிஞர்  பி.என். மீனாச்சி ராமனை  முன்னாள்  ஊழியர்கள் சிலர்  சந்தித்துள்ளனர். 131 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹக்கெம் அரபியின் இந்த வழக்கு பெடரல் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டதால், இது தொடர்பாக புதிய வழக்குகளைத் தாக்கல் செய்வது மிகவும் கடினம் என்று  மீனாச்சிராமன் அறிவுறுத்தியுள்ளார். ஃபெடரல் நீதிமன்றத்தில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஹக்கெம் அரபியின் பட்டியலில் உள்ள முன்னாள் ஊழியர்களால் கோரப்படாத இழப்பீட்டுத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான உரிமையை MBF ஹோல்டிங் கொண்டுள்ளது. பணத்தை MBF ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குத் திருப்பி அனுப்பினால், எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் MBF அந்தத் தொகையை முன்னாள் ஊழியருக்குச் செலுத்தும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதும் குறிப்பிடதக்கது.

   

ஹக்கெம் அரபியின் வாடிக்கையாளர்களான 131 முன்னாள் ஊழியர்களிடம் முன்வைக்கப்படும் கேள்வி- தோழர்களே உங்கள் இழப்பீட்டுத் தொகைக்கான திட்டம் என்ன? MBF ஹோல்டிங்ஸுக்கு பணத்தைத் திருப்பித் தர ஒப்புக்கொள்கிறீர்களா?

ஹக்கெம் அரபியின் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத 80 முன்னாள் ஊழியர்கள் தொடர்பானது-

a) 2 liquidatorகளால் வழங்கப்பட்ட ex-gratia  இழப்பீட்டை கையில் வைத்திருக்கும் ஹக்கெம் அரபியிடமிருந்து முன்னாள் ஊழியர் எஸ்டேட்டில் தனது வீட்டை காலி செய்யும் போது பெற்றுக்கொள்ள முடியும்.

 b) ex-gratia  இழப்பீடு மற்றும் RM5000 (ஹகேம் அராபியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒவ்வொரு முன்னாள் பணியாளருக்கும் MBF வழங்கியது) இன்னும் MBF ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. பாடாங் மேஹா எஸ்டேட்டில் தொழிலாளர் சேவையின் நீளத்தைப் பொறுத்து MBF வைத்திருக்கும் இழப்பீட்டுத் தொகை RM6000 முதல் RM23,000 வரை இருக்கும்.

 

ஹக்கெம் அரபியின் வாடிக்கையாளர்களாக இல்லாத 80 முன்னாள் ஊழியர்களிடம் கேள்விகள்

-தோழர்களே, இன்னும் MBF ஹோல்டிங் வைத்திருக்கும் உங்களின் இழப்பீட்டுத் தொகையைப் பெற விரும்புகிறீர்களா அல்லது liquidator செலுத்திய பங்கில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா (இது மொத்தத் தொகையில் சுமார் 40% மட்டுமே)?

இது முன்னாள்  பாடாங் மேஹா தோட்ட  ஊழியர்களுக்கான வாடகை-கொள்முதல் தரைவீடு வீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு கெடா மாநில அரசாங்கத்திற்கு விண்ணப்பிக்கும் முயற்சியுடன் தொடர்புடையது.

பாடாங் மேஹா பணியாளர்கள் நடவடிக்கை குழு,  முன்னாள் பாடாங் மேஹா ஊழியர்களுக்கான வீட்டுத் திட்டத்திற்காக கெடா மாநில முதல்வரிடம் விண்ணப்பித்துள்ளது. அலோர் ஸ்டாரில் உள்ள மனித வள EXCO மற்றும் கூலிம் மாவட்ட அதிகாரியுடனும் நாங்கள் சந்திப்புகளை நடத்தியுள்ளோம்.

இந்த வீட்டுத் திட்டத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதியை வைப்புத் தொகையாக மாநில அரசிடம் செலுத்தினால், இன்னும் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வாய்ப்புள்ளது.

அழைக்கப்படும் கூட்டத்தில் தயவுசெய்து  கலந்து கொள்ளவும்.

நன்றி

 

டாக்டர் குமார் மற்றும் கார்த்திக்

மலேசிய சோசலிசக் கட்சி

12/11/2021

 

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...