Sunday, January 2, 2022

பி.எஸ்.எம்-மின் புத்தாண்டு தீர்மானங்களை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்


2021 டிசம்பர் 11-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரில் இருந்து மீட்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட வேண்டும் என்று 6 புத்தாண்டு தீர்மானங்களை மத்திய அரசாங்கத்தின் பரிசீலனைக்கு சமர்ப்பித்து பிஎஸ்எம் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.

தளவாட பொருட்கள், ஆடைகள், மின்னியல் சாதனங்கள், வாகனங்கள் போன்றவற்றோடு பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் உடைமைகளையும் இவர்கள் இழந்து இருக்கின்றனர். EPF சேமிப்பிலிருந்து பணம் எடுப்பது போதுமானதாக இருக்காது. பல ஆயிரம் பேர் அவர்களின் EPF சேமிப்பு கணக்கில் போதுமான சேமிப்பை கொண்டிருக்கவில்லை நடமாட்ட கட்டுப்பாட்டு காலகட்டத்தில் சேமிப்பிலிருந்து பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதால் பலரது கணக்குகள் வறண்டு போய் இருக்கின்றன. இந்நிலையில் இந்த மூன்று லட்சம் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரிங்கிட் என்ற ரீதியில் வழங்கினால் மொத்தம் மூன்று பில்லியன் ரிங்கிட் அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசாங்கத்தால் இதனை சமாளிக்க முடியும் என்று பிஎஸ்எம் கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ் குறிப்பிட்டார். 

அடுத்ததாக covid-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 வாரங்களாக நிரந்தர உடல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பக்கவாதம் மாரடைப்பு போன்றவை அவற்றில் அடங்கும்.

பாதிக்கப்பட்டவர்கள் சிறிய அளவில்தான் இருக்கிறார்கள் என்றாலும் இந்த இழப்பீட்டுத் தொகையை அவர்களுக்கு அவசியம் வழங்கப்பட வேண்டும். சொக்சோ வழி அரசாங்கம் இந்த இழப்பீட்டை வழங்கலாம் என்றும் இரண்டாவது தீர்மானத்தில் ஜெயக்குமார் வலியுறுத்தியிருக்கிறார். 

உலகளாவிய மூத்த பிரஜைகள் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது பிஎஸ்எம் கட்சியின் மூன்றாவது தீர்மானமாகும்.  EPF சேமிப்பு வைத்திருக்கும் 54 வயதிற்கு உட்பட்டவர்களின் 20 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் அவர்களின் சேமிப்பு கணக்கில் 50 ஆயிரத்திற்கும் குறைவான தொகையையே வைத்திருக்கின்றனர். இது அவர்களின் ஆயுள் முழுவதும் போதுமானதாக இல்லை. மேலும் 50 வயதிலிருந்து 55 வயதிற்குட்பட்ட ஜனத் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர்  அறவே  EPF சேமிப்பை கொண்டிருக்கவில்லை. 

இந்நிலையில் 55 வயதுக்கும் மேற்பட்ட சொக்சோ ஓய்வூதியம் பெறாதவர்கள் அல்லது அரசாங்க ஓய்வூதியம் பெறாதவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் மாதம் 300 ரிங்கிட் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்த திட்டமானது வயதான காலத்தில் அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு வழி வகுக்கும். covid-19 ஏற்படுத்தியிருக்கும் கொடூர பாதிப்புகளுக்கு பிறகு இதுபோன்ற திட்டம் அவசியமாகிறது. தவிர இத்தொற்று காலத்தில் நூறு பில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான தொகை சேமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறது.

வளப்பப் பங்கீடு அதன் இலக்கை எப்படி ஏற்கப் போகிறது என்பது குறித்து விவாதிப்பதற்கு குழுக்களையும் தனிநபர்களையும் அழைக்கவேண்டும் என்பது பிஎஸ்என் கட்சியின் நாலாவது தீர்மானமாகும். பல குழுக்கள் அவர்களது பரிந்துரைகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர். பி.எஸ்.எம் கட்சியும்  அதன் சார்பாக  5முக்கிய அம்சங்கள் இடம் பெற்ற ஒரு மகஜரை சமர்ப்பித்து இருக்கிறது.  அதில் வருமானப் பங்கீடு, வாங்க தக்க வீடுகள், சுகாதார உதவிகள் பருவ மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளுக்கான உதவிகள் போன்றவை அடங்கும்.  ஆனால் இது குறித்து விவாதிப்பதற்கு யாருக்குமே இன்னும் அழைப்பு வரவில்லை என்பது கவலைக்குரியது என்று ஜெயக்குமார் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

நன்றி மக்கள் ஓசை நாளிதழ் (3/1/2022)

No comments:

Post a Comment

தோழர் அருளின் கைதும் விடுதலையும்

கோலாலம்பூர் : மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) துணைத் தலைவர் எஸ் . அருட்செல்வன்   நேற்று மாலை 6 மணிக்கு டாங் வாங்கி போலீஸ் தலைமை...