Sunday, April 20, 2025

சொத்து விவரங்களை அறிவித்தார் ஆயர் கூனிங் இடைத் தேர்தல் வேட்பாளர் பவாணி


ஆயர் கூனிங் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​பாரிசான் நேஷனல் (BN)) மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (PN)) ஆகிய இரண்டு வேட்பாளர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிக்குமாறு பிஎஸ்எம் வேட்பாளர் பவாணி கேஎஸ் சவால் விடுத்திருக்கிறார். 

ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி, அவரது மொத்த நிகர சொத்துக்கள் RM21,248 என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்தச் சொத்தானது, அவரின் மாத வருமானம், செலவுகள் மற்றும் கடன்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் பவாணி கூறினார்.

"ஊழல் பிரதிநிதிகளை நாங்கள் விரும்பவில்லை என்பதை இந்நேரத்தில் முன்னிலைப்படுத்த விரும்புகிறோம். மக்கள் பிரதிநிதியாக மாறுவதற்கு முன்பு, ஒரே ஒரு காரை மட்டுமே பயன்படுத்தும் ஒருவர், திடீரென்று ஒரு சொகுசு காரை எப்படி மாற்றி பயன்படுத்த முடியும்?"

"அதனால்தான் PSM ஒவ்வொரு ஆண்டும் தங்கள் சொத்துக்களை அறிவிப்பது முக்கியம் என வழியுறுத்தி வருகிறது. எனவே, BN வேட்பாளர் யூஸ்ரி பக்கீர் மற்றும் PN வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலேக் ஆகியோரும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிக்குமாறு நான் சவால் விடுகிறேன்," என்று அவர் தாப்பாவில் உள்ள சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா மசூதிக்கு அடுத்துள்ள காலை சந்தை முற்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பவாணி கூறினார்.



மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,  ஆயர் குனிங் சட்டமன்ற உறுப்பினரின் சொத்துரிமை அதிகரித்ததா இல்லையா என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்காக இந்த சவாலின் பொருத்தப்பாடு முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

39 வயதான பவானி, தனது சட்டப்பூர்வ அறிவிப்பில், RM27,000 மதிப்புள்ள பெரோடுவா பெஸ்ஸா காரையும், RM1,499 மதிப்புள்ள ஹானர் X9B ஸ்மார்ட்போனையும் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார், இதன் மொத்த மதிப்பு RM28,499.

"வருமானம் மற்றும் செலவுகளுக்கு, என்னிடம் RM583 ரொக்கம் உள்ளது, அதே நேரத்தில் பல வங்கிக் கணக்குகளில் மொத்த சேமிப்பு RM20,638 உள்ளது."

தனக்கு கார் கடன் RM13,139 மற்றும் கல்வி கடன் RM14,750 இன்னும் இருப்பதாக பவாணி கூறினார்.

" அனைத்தையும் கூட்டியும் கழித்தும் கணக்கிடும்போது  நிகரத் தொகையாக தனது சொத்தின் மதிப்பு  RM21,248 என மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார், தோழர் பவானி RM5,000 மாத வருமானம் கொண்ட ஒரு வழக்கறிஞரும் என்பது இங்கு குரிப்பிடதக்கது.

பி.எஸ்.எம் தேர்தல் களத்தில் இறக்கும் தமது வேப்பாளர்களின் சொத்து விவரங்களை எந்த ஒளிவும் மறைவும் இன்றி பொதுவில் அறிவிப்பதை ஒரு கலாச்சாரமாகவே கொண்டிருக்கிறது. அந்த வகையில் இம்முறையும் தம் கடப்பாட்டை நிறைவேற்றியிருக்கும் வேளையில், மற்ற கட்சி வேட்பாளர்கள் தங்களி சொத்து விவரங்களை அறிவிக்கும் திராணி கொண்டிருக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

No comments:

Post a Comment

குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிரமாக இல்லை

மலேசியா சோசியலிச கட்சி (பிஎஸ்எம்) சமீபத்தில் முகநூலில் வெளிவந்த பெடோபிலியா பிரச்சினையின் மீது நடவடிக்கை எடுப்பதில் தகவல் தொடர்பு அமைச்சு மற்...