மலேசியா சோசியலிச கட்சி (பிஎஸ்எம்) சமீபத்தில் முகநூலில் வெளிவந்த பெடோபிலியா பிரச்சினையின் மீது நடவடிக்கை எடுப்பதில் தகவல் தொடர்பு அமைச்சு மற்றும் பன்னூடக ஆணையம் காட்டிய தாமதத்தை கடுமையாக கண்டனம் செய்கிறது. இன்னும் கவலைக்குரியது என்னவென்றால் சம்பந்தப்பட்ட முகநூல் குழு 12000க்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கியது. இதை வெறும் சிறிய பிரச்சனையாக கடக்காமல், சமூகத்தின் அவலங்களை நிரூபிக்க கூடிய அறிகுறியாக பார்க்கப்பட வேண்டும்.
அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்திடமிருந்து இந்த தீவிரமான பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை தேவை. இருப்பினும், இச்சம்பவத்தை குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்ஸில் அல்லது குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரியிடமிருந்தும் முறையான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.
மலேசியா அமைச்சகம் குழந்தைகளின் பாதுகாப்பை குலைய செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து செயல்படுவதில் ஏன் தீவிரமாக இல்லை? ஊடகம் அறிக்கைகள் இந்த முகநூல் குழு 2014-இருந்து உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் ஏன் எம்சிஎம்சி முன்னரே கண்டறிந்து குழுவை முடக்க தவறிவிட்டது? தீங்கு விளைவிக்கும் மின்னிலக்க உள்ளடக்கத்தை கண்காணிப்பதின் செயல்திறன் எங்கே?
அரசியல் பிரச்சினைகள் எதிர்கொள்ளும்போது அரசாங்கம் பெரும்பாலும் விவேகமாகவும் துடிப்பாகவும் இருக்கிறது. ஆனால், சமூகத்தில் அதிகமாக பாதுகாப்பு தேவைப்படக்கூடிய குழந்தைகளின் பிரச்சனைகளில் ஏன் தீவிரமோ ஈடுபாடோ காட்ட மறுக்கிறது?
பி.எஸ்.எம் கோரிக்கைகள்:
1. இந்த குழுவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி, சட்டம் 792 குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் 2017 கீழ் குற்றச்சாட்டு நிறுவப்பட வேண்டும்.
2. இந்தக் குழுவின் செயல்பாடுகளை முன்னதாக கண்டறிய தவறியதற்கான காரணங்களை பற்றி எஸ்கேஎம்மும் (SKMM) மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளும் தெளிவான விளக்கம் வழங்க வேண்டும்.
3. இத்தகைய பிரச்சனைகளை கையாள அரசுக்கு வழிகாட்ட, மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (SUHAKAM) ஆணையர் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.
No comments:
Post a Comment